Wednesday 24 April 2013

இங்கிலாந்தில் 1 லட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக "THE SUN" பத்திரிகை தகவல்! ! !



muslim girl praying
இங்கிலாந்தில் 1 லட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக "THE SUN" பத்திரிகை தகவல்! ! ! !

இன்றைய (22/04/ 13) "THE SUN" பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திதொகுப்பில், இங்கிலாந்துநாட்டில் இஸ்லாம் வேகமாக பரவி வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சம் பேர் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாக புள்ளி விவரங்களுடன், செய்தி வெளியிடப்பட்டுள ்ளது.

ஒவ்வொரு ஆண்டும், குறைந்தது 5,000 நபர்கள் இஸ்லாத்தை ஏற்று வருவதாக "THE SUN" கூறுகிறது.

http://www.thesun.co.uk/sol/homepage/woman/4769410/Meet-four-women-who-have-converted-to-Islam.html

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்களில், பாதிக்கும் மேற்பட்டோர் "வெள்ளையர்" என்றும் அதிலும் 75% பெண்கள் எனவும் கூறுகிறது, அந்த செய்தி.

2011 ம் ஆண்டில் மட்டும் 5,200 நபர்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளனர்.

உரிமையை மீட்க! அணி திரள்வீர்!

கண்ணியமும் மகத்துவமும் மிக்க எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
உங்களுக்கு  நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அதனால் அவர்கள் மகிழ்கின்றனர். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு எந்த தீங்கும் தராது. அவர்கள் செய்வதை அல்லாஹ் முழமையாக அறிபவன். (அல்குர்ஆன் 3:1-20)

அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் தனக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதவரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவராகமாட்டார்.(அறிவிப்பவர்: அனஸ்(ரலி) புகாரி)
இடஒதுக்கீடு! பன்முகத்தன்மை கொண்ட இந்திய தேசத்தில் வாழும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடிப்படையான வாழ்வாதார உரிமை தான் இடஒதுக்கீடு. நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெற வேண்டிய நன்நோக்கில் அரசியலமைப்பு ரீதியாக ஏற்படுத்தப்பட்டதுதான் இடஒதுக்கீடு. செல்வாக்கு மிக்க தங்கள் தலைவர்களால் சில சமுதாயத்தினரும் கடுமையான போராட்டங்களால் சில சமுதாயத்தினரும் இந்த உரிமையை பெற்று நிலைநாட்டி வருகின்றனர்.
உரிமைகளையும் கடமைகளையும் மார்க்கரீதியாக பெற்றுக் கொண்ட முஸ்லிம் சமுதாயமோ தங்களின் இடஒதுக்கீடு உரிமையை பெறுவதில் அலட்சியப் போக்குடன் இருந்து வருகின்றனர். ஆரம்ப காலங்களிலிருந்தே உரிமைகள் விஷயத்தில் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களை கண்டு கொள்ளாமல் இருந்து பிறகு ஓரங்கட்டி பிறகு தீவிரவாதி முத்திரை குத்தி வருகின்றனர்.
அடிமை இந்தியாவில் போராட்ட வீரர்களாகவும், சுதந்திர இந்தியாவில் அடிமைகளைப் போலவும் நடத்தப்படும் இந்த இஸ்லாமிய சமுதாயம் தன் நிலையை உணர்ந்து தனக்கு உண்டான வலிமையை கேட்டுப் பெற்று தானும் மண்ணின் மைந்தன் என்ற உரிமையை நிலைநாட்ட கிடைக்கவிருக்கும் களமே இந்த அக்டோபர் 8 ல் நடை பெறவிருக்கும்  உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம்.
நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மாபெரும் வல்லரசு நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது. உங்களுக்குத் தெரியும்.இந்த நாட்டின் அடக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் உங்கள் கண்ணெதிரில் உயரத்துக்குச் சென்று கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரிகிறது. எல்லாச் சமுதாய மக்களும் உயர் கல்வி கற்று,பதவிகளையும் நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளதையும் அரசியல்  அதிகாரத்தையும் மற்றவர்களுக்கு சமமாகப் பெற்றுள்ளதையும் நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் உங்களின் நிலை என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா?
இந்திய நாட்டை உருவாக்கியதிலும் அதை வளப்படுத்தியதிலும் வெள்ளையனிடம் இருந்து நாட்டை மீட்பதிலும் மற்ற அனைத்து சமுதாயங்களை விட நாம் அதிக உழைப்பு செய்தோம்.
வெள்ளையனை எதிர்ப்பதற்காக அவனுடைய மொழியைப் படிக்கக் கூடாது என்றோம்.படிப்பைப் பாதியில் நிறுத்தினோம்.வெள்ளையனுடைய அரசாங்கத்தில் வேலை பார்க்கக்கூடாது என்று முடிவு எடுத்து அனைத்து வேலைகளையும் உதறித் தள்ளினோம்.
வழிபாட்டுத்தலங்களைக் கடவுள் வழிபாட்டுக்கு மட்டும் மற்ற சமுதாய மக்கள் பயன்படுத்தி வந்தபோது வெள்ளையனை எதிர்த்து கிளர்ச்சி செய்யும் மேடையாக  பள்ளிவாசல்களை நாம் பயன்படுத்தினோம். வெள்ளையன் கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மற்ற சமுதாய மக்கள் முன்னேறிய போது அதையும் பயன்படுத்த மறுத்தோம்.
உடலாலும் பொருளாலும் உயிராலும் தியாகம் செய்வதில் மட்டும் அளைவரையும் நாம் மிஞ்சினோம். நாட்டின் விடுதலைக்காக கல்வியையும் வேலைவாய்ப்பு களையும் தியாகம் செய்த நம்மைத் தவிர மற்ற அனைவரும் நம்மை எல்லா வகையிலும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பல மடங்கு மேலே சென்று விட்டார்களே அது பற்றிச் சிந்தித்தீர்களா?
கூலித் தொழலாளியாகவோ,இறைச்சிக் கடைக் காரராகவோ,நடைபாதையில் வியாபாரம் செய்பவராகவோ, கொல்லுப்பட்டறையில் கடின வேலை செய்பவராகவோ, தோல்பதனிடும் தொழிலாளியாகவோ, பெட்டிக்கடை நடத்துபவராகவோ, குறைந்த ஊதியத்தில் கடைகளில் வேலை செய்பவர்களாகவோ இருப்பவர்கள் நம் சமுதாயத்தில் மட்டும் மிக அதிகமாக இருப்பது ஏன் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?
சொந்த நாட்டில் தகுந்த கல்வியும் தகுதிக்கேற்ற வேலையும் மறுக்கப்பட்டு நாம் மட்டும் வெளிநாடுகள் சென்று மனைவி மக்களைப் பிரிந்து அல்லல்படுவது ஏன்?
ஒட்டகம் மேய்த்தல்,சாலை போடுதல்,கழிவுகளைச் சுத்தம் செய்தல் உயிரைப் பணயம் வைத்து உயரமான கட்டிடப் பணிகளில் கூலித் தொழில் செய்தல், தனியாருக்குக் காரோட்டும் வேலை, வீடுகளைச் சுத்தம் செய்தல், சமையல் வேலை இப்படி அற்பமான ஊதியத்தில் வேலை பார்த்து நீங்கள் மட்டும் ஏன் அவல நிலையில் இருக்க வேண்டும்?
மற்றவர்கள் எல்லாம் மனைவி மக்களோடு மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் மட்டும் தொலைபேசி மூலம் குடும்பம் நடத்துவது ஏன்?இதை மாற்றியமைக்கும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறதா? இல்லையா?
88 லட்சம் மத்திய அரசு ஊழியர்களில் 11 லட்சம் இருக்க வேண்டிய முஸ்லிம்கள் 35 ஆயிரம் மட்டும் தான் உள்ளனர் என்று முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி சர்சார் கமிட்டியின் அறிக்கை கூறுகிறதே! இந்த நிலை இனியும் தொடரலாமா?
பாதுகாப்பு தொடர்பான பணிகளில் மூன்று சதவிகிதம் உள்ளனர் என்றும் தலித் மக்களின் நிலையை விட மோசமாக முஸ்லிம்களின் நிலைமை இருக்கிறது என்றும் சர்சார் அறிக்கை கூறுகிறதே? அதை மாற்றியமைக்க வேண்டாமா?
முஸ்லிம்களின் கல்வி அரசியல் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் அறிக்கையில் கூறப்பட்ட அதிர்ச்சியளிக்கும் உண்மைகள் உங்களை கவலையில் ஆழ்த்தவில்லையா?
முஸ்லிம்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 65.31 சதவிகிதம்.அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 35பேர் ஐந்தாம் வகுப்பு கூட படிக்கவில்லை.
ஐந்தாம் வகுப்புக்கு மேல் எட்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் 15.14 சதவிகிதம் என அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 85 பேர் எட்டாம் வகுப்பு வரை படிக்கவில்லை.எட்டாம் வகுப்புக்கு மேல் பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் 10.96 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் 11 பேர் தான் பத்தாம் வகுப்பு படித்தவர்கள்.பத்தாம் வகுப்புக்கு மேல் பன்னிரண்டு வரை படித்தவர்கள் 4.53 என்று அந்த அறிக்கை கூறுகிறது. அதாவது 100 முஸ்லிம்களில் ஐந்து பேர் தான் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்.பட்டப்படிப்பு படித்தவர்கள் 3.6 என்கிறது அந்த அறிக்கை. அதாவது 100 முஸ்லிம்களில் மூன்று பேர் தான் பட்டப்படிப்பு படித்தவர்கள்.
 இவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் எந்தச் சமுதாயமும் இல்லை. நமக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை என்று சிந்தித்துப் பார்த்தீர்களா? கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இந்த அவல நிலை என்றால், பொருளாதார நிலையிலாவது நமது நிலை உயர்ந்து இருக்கிறதா? அல்லது மற்ற சமுதாயங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கிறதா? பொருளாதாரத்தில் கடைசி நிலையில் இருக்கும் தலித் மக்களுடன் போட்டியிடும் அளவுக்குத்தான் நமது நிலை உள்ளது. 
முஸ்லிம் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் 1832 ரூபாயும் இருபது காசுகளும் தான் என்கிறது அந்த அறிக்கை.
அது மட்டுமின்றி ஒவ்வொரு 100 முஸ்லிம்களில் 31 பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர் எனவும் நீதிபதி மிஸ்ரா கமிஷன் கூறுகிறது.
மற்ற சமுதாய மக்களில் நூற்றுக்கு இருபது பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கும் போது நமது சமுதாயத்தில் நூற்றுக்கு 31 பேர் வறுமையில் உள்ளனர் என்றால் இந்த நிலையை உயர்த்திட நாம் பாடுபட வேண்டாமா?
வறுமைக்கோடு என்பதன் அர்த்தம் தெரிந்தால் இட ஒதுக்கீட்டை நம்மால் அலட்சியப்படுத்தவே முடியாது. கீழ்க் கானும் தகுதியில் இருப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்று நிர்ணயித்துள்ளனர்.
சொந்தமாக இடம் இல்லாதவர்கள்.இரண்டு ஆடைகளுக்கும் குறைவாக வைத்துள்ளவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும உணவு உண்பவர்கள். வெட்ட வெளியில் கழிப்பிடம் செல்பவர்கள். வீட்டு உபகரணங்கள் (டிவி. ரேடியோ மின் விசிறி குக்கர் போன்றவை) இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் கூலி வேலை செய்பவர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாதவர்கள் நிலையான தங்குமிடம் இல்லாதவர்கள்.
இத்தகைய நிலையில் நம் சமுதாயம் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருப்பது உங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவில்லையா? பிச்சைக்காரர்களின் வாழ்க்கைத் தரத்துக்கான ஒப்பான வாழ்க்கை வாழும் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த கண்டிப்பாக உழகை;கும் கடமை நமக்கு உள்ளதா? இல்லையா?
இதன் பின்னரும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை இயற்றாமல் காங்கிரஸ் இழுத்தடிக்கப் பார்க்கிறது. ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கபடும் என பிரதமர் கூறியுள்ளார்.
பாஜக இதை எப்படி ஒப்புக் கொள்ளும்?. ஒருமித்த கருத்து எப்படி ஏற்படும்? ஒருமித்த கருத்து உருவான பின்னர் தான் இட ஒதுக்கீடு என்றால் மிஸ்ரா கமிஷன் அமைத்தது எதற்காக? முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்பதை தான் பிரதமர் வேறு வார்த்தையில் சொல்லி இருக்கிறார். முஸ்லிம் சமுதயாத்தை ஏமாளிகளின் சமுதாயம் என்று பிரதமர் தப்புக் கணக்குப் போட்டுள்ளதையே இது காட்டுகிறது. 
ஆனால் இத்தகைய பிரதமரையே நமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அழைத்து இட ஒதுக்கீடு சம்பந்தமாக காங்கிரஸ் தலைவி சோனிவுடன் சேர்ந்து பேச வைத்தது நம் சமுதாய மக்கள் சென்னை தீவுத்திடலில் திணற வைத்ததால் தான். 
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த கருனாநிதி மற்றும் ஜெயலலிதா அவர்களும், நம்முடைய கட்டுக்கடங்காத போராட்டங்களால் தங்களுடைய நிலையை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது.
குடந்தையை குலுங்க செய்த பேரணி மாநாடு தான் ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு ராஜசேகர ரெட்டியினால் வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்த கண்டித்த ஜெயலலிதாவை கமிஷன் அமைக்க வைத்தது. 
ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை  மறந்து விடலாம் என்று எண்ணிய கலைஞரைக்கூட நம்முடைய தொடர் போராட்டங்களும், ஜூலை 4ல் சிறை நிரப்பும் போராட்டமும் தான் மாநிலத்தில் 3.5; சதவிகிதம் இட ஒதுக்கீட்டை பெற்று தந்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இதன் காரணமாக இட ஒதுக்கீட்டின் பலனை ஒரளவு பெற்றுள்ளோம். இருப்பினும் நம் முஸ்லிம் மக்கள் தொகைக் கேற்ப இந்த 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு போதாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.
இதன் காரணத்தினால் தான் தமிழகத்தில்   முஸ்லிம்களுக்கு 7 சதவிகிதமும் மத்தியில் 10 சதவிகிதமும் கேட்டு பெற வேண்டி இன்ஷாஅல்லாஹ் வருகின்ற அக்டோபர் 8ம் தேதி சென்னையில் தமிழ்நாடு தவ்வஹீத் ஜமாஅத்தின் சார்பாக இடஒதுக்கீடு கோரி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திரும்பவும் எழுச்சியை காட்டும் நிலைக்கு சமுதாயம் தள்ளப்பட்டு விட்டது. 
தலைவர்களின் துதிபாட, அரசியல் கட்சிகளுக்கு பலம் சேர்க்க உன்னைக் காட்டி விலைபேசுவோருக்கு உன்னை அறியாமல் உதவ பல களங்களைச் சந்தித்துள்ளாய்.
இப்போது உனக்காக மானத்தோடும் மரியாதையோடும் நீ வாழ்வதற்காக உனக்கு ஏற்பட்ட நிலை உன் சந்ததிகளுக்கும் ஏற்படாமல் தடுத்து நிறுத்திட!
நாங்கள் பட்ட துன்பங்களை எங்கள் சந்ததிகளுக்கும் விட்டுச் செல்ல மாட்டோம் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய!
66 ஆண்டுகள் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற மாட்டோம் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்திட! 
இட ஒதுக்கீடை அடைய எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயங்க மாட்மோம் என்பதை உலகுக்கு உணார்த்திட!
குடும்பத்துடன் புறப்பட்டு வா! அலை அலையாய் திரண்டு வா! புயலென புறப்பட்டு வா! இறைவன் உதவியால் வென்று காட்டுவோம்!

பத்திரிக்கை செய்தி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தௌஹீத் ஜமாஅத் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டம் சமந்தமாக பத்திரிக்கைகளில் வந்த செய்திகள்

Tuesday 23 April 2013

தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம் குறித்த பத்திரிக்கை செய்தி.


திருத்துறைப்பூண்டி 1 கிளை சார்பாக கடந்த 19-4-2013 அன்று நடைபெற்ற தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம் குறித்த பத்திரிக்கை செய்தி.










Sunday 21 April 2013

தவ்ஹீத் எழுச்சி பொதுக் கூட்டம்:



 திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கிளை சார்பில்
 19-4-2013 தவ்ஹீத் எழுச்சி பொதுக்கூட்டம்  மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 









இதில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முகம்மது அல்தாபி











மாவட்ட பேச்சாளர் தாவுது கைசர் ஆகியோர்  சிறப்புரையாற்றினர்.














மாவட்ட மருத்துவரணி செயலாளர் அவர்கள் மாவட்ட இரத்ததான
பணிகள் குறித்தும் வரும் கோடைகால இரத்ததான முகாம் குறித்தும் விளக்கிபேசினார்.





ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மாநாட்டைப்போல் திரண்டிருந்தனர்.
















 மாநில செயலாளர் திருத்துறைப்பூண்டி அப்துர் ரஹ்மான் யார் நினைத்தாலும் இந்த ஏகத்துவத்தை ஊத்தி அணைக்க முடியாது என்றும், அக்டோபர்  8ல் நடைபெற உள்ள இடஒதுக்கீடு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.








மாவட்ட பேச்சாளர்  அப்துல்மாலிக் 






 கிளை-1 செயலாளர்
ஷாகுல்ஹமீது   தீர்மானம் வாசித்தார்





 கிளை-2 தலைவர் சம்சுதீன்
   தீர்மானம் வாசித்தார்
















கலந்துகொண்ட மக்களில் ஒரு பகுதியினர்...






















பெண்களில் ஒரு பகுதியினர்..














மரண அறிவிப்பு,




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

.
திருத்துறைப்பூண்டி மேட்டுத் தெருவில் வசித்து வந்த
திருத்துறைப்பூண்டி ரயிலடி முஸ்லிம் ஜமாத்தின் பொருளாலரும்.
TTPஎம் எம் ஜி மளிகையின் பங்காளியுமான,
மர்ஹும்.ஜி.ஜெஹபர்.[75]அவர்கள்
 21-04-2013-மாலை 4.00 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்ளாகி வ இன்ன இலைஹி ராஜியூன் .
அன்னாரின் ஜனாஸா  22-04-2013 அன்று திருத்துறைப்பூண்டி
ரயிலடி பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

ஹிந்து பையனுக்கும் முஸ்லிம் பெண்ணுக்கும் திருமனம் செய்துவைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தமுமுக [மமக] பொது செயலாளர் அப்துல் சமது .





 தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பஜகதலைவர் இலகனேசனின்கையை பிடித்து தூக்கிகொண்டு போஸ் கொடுத்தார் இதை மக்கள் விமர்சித்ததும் அவர்தான் என்கையை பிடித்தார் என போட்டோவில் இருப்பதற்க்கு மாற்றமாக கூறி அசடுவழிந்தார் இப்போது அந்த கட்சியின் [மமக] பொதுசெயளாளர் அப்துல்சமது அவர்கள் ஒரு முஸ்லிம்பெண்னுக்கு ஒரு இந்து பையனை கல்யானம் செய்யும் கேடுகெட்ட நிகழ்ச்சியில் நின்று கொண்டு போஸ் கொடுக்கிறார் இப்போது மக்கள் வருத்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் இவர் என்ன சொல்லி அசடுவழிகிறார் பார்ப்போம் ஓட்டுக்காக இஸ்லாத்தை கேவலப்படுத்தும் இது போன்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு போஸ்கொடுக்கும் இஸ்லாமிய பொர்வைபோத்திய அரசியல் வியாதிகளே கீழே உள்ள குரான் வசனத்தை ஒருதடவை படித்து பாருங்கள் அல்லாஹ் உங்களை காப்பாற்ருவானாக
 قال تعالى وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ } (221) سورة البقرة இணைவெக்கும் பெண்கள் அவர்கள் விசுவாசம் கொண்டாலே தவிற அவர்களை மணக்க வெண்டாம். ஓரு விசுவாசி விசுவாசியான பெண்னையே திருமணம் செய்யவேண்டுமென இஸ்லாம் வழியுருத்துகிறது மாமறை – 2:221