Saturday, 26 January 2013

ரத்ததானமுகாம்

திருத்துறைபூண்டி தமிழ்நாடு  தௌஹீத் ஜமாஅத் மற்றும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி இணைந்து குடியரசு தினத்தன்று (26-01-2013) ரத்ததானமுகாம் நடைபெற்றது. நகர மருத்துவ அணி செயலாளர் ஜமால் தலைமையேற்றார்.நகர கிளை II செயலாளர் முஹம்மது உசேன் மூசா வரவேற்றார்.நகரமன்ற தலைவர் திருமதி.உமா மகேஸ்வரி ,  TNTJ திருவாரூர் மாவட்ட தலைவர் பா.அப்துல்ரஹ்மான் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.




இந்திய தேசிய காங்கிரஸ் நகர செயலாளர் C.சங்கரவடிவேல் ,புதியதமிழகம் நகரசெயலாளர் A .K . சுரேஷ் கவுன்சிலர்கள் R .சீனிவாசன் ,T .R .S . சக்திவேல் , P. எழிலரசன் ஸ்டீபன் செல்வக்குமார் ,ரயிலடி பள்ளி  G சாகுல்ஹமீது , TNTJ நகர செயலாளர் சாகுல்ஹமீது, TNTJ நகர தலைவர் சம்சுதீன் நெடும்பலம் கிளை செயலாளர் தாஜ் ,பொருளாளர்  நிஜாம் ,கட்டிமேடு கிளை தலைவர் ஷேக் அப்துல்லாஹ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நகர கிளை தலைவர் கலீல் ரஹ்மான் நன்றி கூறினார். 

இம்முகாமில் 34 பேர் ரத்ததானம் செய்தனர். இம்முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்த மாற்றுமத சகோதரர்களுக்கும் , முகாம் நடத்திய  மருத்துவ குழுவில் இடம்பெற்ற மாற்றுமத அன்பர்களுக்கும் மாமனிதர் நபிகள்நாயகம் நூல் வழங்கப்பட்டது. 



 நகரமன்ற தலைவர் திருமதி.உமா மகேஸ்வரி அவர்களுக்கு மாவட்ட தலைவர் பா.அப்துல்ரஹ்மான் மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழங்குகிறார்.

மருத்துவக்குழு சகோதரிக்கு மருத்துவ அணி செயலாளர் ஜமால்   மாமனிதர் நபிகள் நாயகம் நூல் வழங்குகிறார்.

No comments:

Post a Comment