Tuesday, 12 February 2013

மாணவர் அணி நிர்வாகிகளின் மாநில தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில மாணவரணி சார்பாக மாநிலம் தழுவிய "மாணவரணி நிர்வாகிகளுக்கான தர்பியா" முகாம் சென்னை தி.நகர் வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில் வைத்து பிப்ரவரி 10 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இக்களப்பயிற்சி முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவரணி நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். சமூகத்தின் வளர்ச்சிக்கு மாணவர்கள் செய்ய வேண்டிய தியாகம், நேர மேலாண்மை மற்றும் தலைமைத்துவ பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது, கல்லூரிகளில் பயிலும் போது பேண வேண்டிய ஒழுக்க நடைமுறைகள் போன்ற பல்வேறு தலைப்புக்களில் பல கல்வியாளர்களும் அறிஞர்களும் நிர்வாகிகளுக்கு பயிற்சி வகுப்பெடுத்தனர். இஸ்லாமிய அறிஞரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவருமாகிய பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "மாணவரணியின் எதிர்கால செயல் திட்டம்" குறித்து உரையாற்றினார்கள். தன்னையும் வளப்படுத்தி தன்னை சுற்றி இருப்பவர்களையும் வளப்படுத்துவதே மாணவரனியின் முதல் இலக்காக இருக்க வேண்டும் என்றும், சமூகத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் மாணவர்கள் தியாகங்களை செய்து பொறுப்புள்ள பிரதிநிதிகளாக வர வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்கள். வருகிற கல்வி ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட "என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம்", "பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?" போன்ற கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளையும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் "வேலை வாய்ப்பை பெறுவது எப்படி?" போன்ற வேலை வாய்ப்பு முகாம்களையும், சட்டம் குறித்த விழிப்புணர்வை கொண்டு வரும் "சட்ட விழிப்புணர்வு முகாம்களையும்" நடத்த வேண்டும் எனவும், ஏழை மாணவர்கள் பயன் பெரும் வண்ணம் கல்விக்கான நிதி உதவியாக சுமார் 5 கோடி ரூபாய் மாநிலம் தழுவிய நிலையில் வசூலித்து தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

No comments:

Post a Comment