Thursday, 7 February 2013

அத்வானி மீது மேல் முறையீடு தாமதம் ஏன்?

> பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீது மேல் முறையீடு தாமதம் ஏன்? என்று சிபிஐ க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கிலிருந்து அத்வானியை விடுவித்து அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து மேல் முறையீடுசெய்யப் போவதாக சி.பி.ஐ. கூறி இருந்தது இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று(7-2-2013) நடந்தது. அப்போது, அத்வானிக்கு எதிராக மேல் முறையீடு செய்ய காலதாமதம் செய்வது ஏன்? என்று சி.பி.ஐ.க்கு நீதிபதிகள் கேள்வி விடுத்தனர்.

No comments:

Post a Comment