அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
Thursday, 7 February 2013
சவூதி அரசின் தீர்ப்பை மதிக்கிறேன் - ரிசானா நபீக் தாயார்!
சவூதி அரேபியாவில் நான்கு மாத குழந்தை ஒன்றை பால் ஊட்டும் போது கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இலங்கைப் பணிப்பெண்
றிசானா நபீக்கிற்கு "ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அந்த தீர்ப்பை நான் மதிக்கின்றேன்" என அப்பணிப்பெண்ணின் தாய் றசீனா நபீக் தெரிவித்துள்ளார். "அல்லாஹ் எமக்கு தந்த மகளை அவன் எடுத்துக் கொண்டான். இதுவே எனது நம்பிக்கை" எனவும் அத்தாய் தெரிவித்துள்ளார்.
மேலும், "எனது மகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதிலிருந்து என் மகளை விடுதலை செய்வதற்காகாவும், பாதிக்கப்பட்ட தரப்பினரின் மன்னிப்பை பெற்றுக் கொள்வதற்காகவும் பலரும் பலவித முயற்சிகளில் ஈடுபட்டதை நான் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன். என் மகளுக்காக உலகில் பல பாகங்களிலும் எமது சகோதரர்கள் பிரார்த்தனை செய்தார்கள். என்றாலும் ஷரீஆ சட்டப்படி என மகளுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்ப்பை நான் மதிக்கின்றேன். இத்தருணத்தில் எனது மகளின் விடுதலைக்காக முயற்சி செய்தவர்கள், பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்" எனவும் அத்தாய் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment