Wednesday, 13 February 2013

சவூதி: குழந்தை கொலை விசயத்தில் நீதித்துறை விளக்கம்

5 வயது குழந்தை லுமாவை வன்புணர்ந்து, கொடூரமாக துன்புறுத்திக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட லுமாவின் தந்தை இழப்பீட்டுத்தொகை வழங்கி விடுதலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என சவூதி நீதித்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. தன் 5 வயது மகளைக் கொடூரமாக வன்புணர்ந்து கொலை செய்த ஃபாய்ஹன் அல் கம்தி என்ற மதப்போதகர், சிறையிலிருந்த 4 மாதக் காலத்தைத் தண்டனை காலமாக கருதி சவூதி நீதிமன்றம் விடுதலை செய்ததாகவும் குழந்தையின் தாய்க்கு இரத்தப்பணம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியாகியிருந்தது. இச்செய்தியினை சவூதி நீதிதுறை அமைச்சகம் மறுத்துள்ளது. இது தொடர்பாக நீதித்துறை அமைச்சகப் பேச்சாளர் ஃபஹத் பின் அப்துல்லா அல் பொக்ரான் கூறும்போது, "லுமா வழக்கில் சவூதி நீதிமன்ற தீர்ப்பு என செய்தித்தாள்களிலும் மின்னணு ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியான செய்திகள் உண்மையல்ல. அவ்வழக்கு இப்போதும் நீதிமன்ற விசாரணையிலேயே உள்ளது. தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை. லுமாவின் தந்தை இப்போதும் சிறையிலேயே உள்ளார். விடுதலை செய்யப்பட்டதாக வந்தச் செய்தி தவறு. இவ்வழக்கின் எல்லா ஆவணங்களையும் பரிசீலித்து விரைவிலேயே தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்" எனக்கூறியுள்ளார். லுமாவை வன்புணர்ந்து கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஃபாய்ஹன், ஊடகங்களில் குறிப்பிடப்பட்டது போன்று ஒரு மதப்போதகர் அல்ல என்பதும் 3 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்துள்ள ஃபாய்ஹன் இறந்தவர்களின் சடலங்களைச் சுத்தம் செய்யும் பணி செய்துவந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. Read more about சவூதி: குழந்தை கொலை விசயத்தில் நீதித்துறை விளக்கம்! [8857] | மத்திய கிழக்கு செய்திகள் | செய்திகள் at www.inneram.com

No comments:

Post a Comment