Tuesday 19 March 2013

மலேசியாவில் எண்ணெய் கிடங்கு நிறுவுகிறது அபுதாபி

உலகில் மிக அதிமாக எண்ணெய் வளமிக்க ஐக்கிய அமீரக நாடுகளின் தலைநகரான அபுதாபி மலேசியாவில் எண்ணெய் கிடங்கினை நிறுவுகிறது. ஐக்கிய அமீரக நாடுகளின் இளவரசரான நஹ்யான் மலேசிய வருகைக்கு மலேசியப் பிரதமர் நஜீம் அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று மலேசியா வந்துள்ள நஹ்யான் இரு நாடுகளுக்கும் மத்தியில் நல்லுறவு வளரும் வகையில் பல ஒப்பந்தகளை கையெழுத்திட்டுள்ளார். அவற்றில் முக்கியமாக மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு மத்தியில் உள்ள ஜொஹோர் மாநிலத்தில் 6.76 பில்லியன் டாலர் முதலீட்டில் எண்ணெய் கிடங்கு அமைப்பது முதலிய திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் மலேசியாவில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு 6.8 பில்லியன் டாலரும், சென்ற ஆண்டு 8.0 பில்லியன் டாலரும் முதலீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment