Monday, 21 January 2013

பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்தும் பாஜக, ஆர்எஸ்எஸ்: ஷிண்டே குற்றச்சாட்டு


காவி பயங்கரவாதத்தைப் பரப்புவதற்காக, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
ஒரு பக்கம் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம். ஆனால், பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் ஹிந்து பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக, பயிற்சி முகாம்களை நடத்தி வருவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விழிப்புடன் கண்காணித்து வருகிறோம்.
சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பான விசாரணையில், வலதுசாரி தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது என்றார் அவர்.
 இது தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ""காவி பயங்கரவாதம் பற்றி நான் கூறியது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. ஏற்கெனவே ஊடகங்களில் பலமுறை வெளிவந்த விஷயம்தான் என்றார்.

No comments:

Post a Comment