Thursday, 31 January 2013

விஸ்வரூபம்: பாதுகாப்பு கொடுக்க போதிய காவலர்கள் இல்லை - முதல்வர் பேட்டி


     விஸ்வரூபம் திரைப் படத்துக்கு விதிக்கப் பட்ட தடை குறித்து தமிழக முதல்வர்  ஜெயலலிதா செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார்
அதில் ''விஸ்வரூபம் திரைப்படத்துக்கு பாதுகாப்பு அளிக்க போதிய காவலர்கள் இல்லாத காரணத்தால் தான் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க படம் தடை செய்யப்பட்டது. வன்முறை வெடிக்கும் என உளவுத துறை எச்சரித்த காரணத்தால் படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
விஸ்வரூபம் திரைப்படம் தமிழகம் முழுவதும் 524 தியேட்டர்களில் வெளியாக திட்டமிட்டு இருந்தது. இத் திரைப்படத்துக்கு மூன்று ஷிப்ட்களில் பாதுகாப்பு அளிக்க 56440 காவலர்கள் தேவை. ஆனால் தமிழக காவல்துறையில் மொத்தம் இருப்பதோ 91807 காவலர்கள் தான்.
அதிலும் போக்குவரத்து, அன்றாட சட்டம் ஒழுங்கு என போக 9000 காவலர்களை வைத்து படத்துக்குப் போதிய பாதுகாப்பு அளிக்க முடியாத நிலையில் தான் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது'' என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment