Thursday, 31 January 2013

கமலால் மட்டும் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியாது - முதல்வர் ஜெ


 "என்னுடைய 30 வருட அரசியல் அனுபவத்தில் கமல் மட்டும் தீர்மானித்து பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியாது" என்று முதலவர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்துக்குத் தமிழக அரசு தடை விதித்ததன் பின்னணியில் முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பு உண்மையான காரணமல்ல எனவும் விஸ்வரூபத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையினை ஜெயா தொலைக்காட்சிக்கு வழங்காமல் விஜய் தொலைக்காட்சிக்கு வழங்கியதும் ப. சிதம்பரத்தைக் குறிப்பிட்டு "வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும்" என கமல் பேசியதுமே உண்மையான காரணம் என சந்தேகம் கிளப்பப்பட்டது. இதற்கு ஏற்றாற் போன்று கமல் ஹாஸனும், என்னையும் இஸ்லாமிய நண்பர்களையும் அரசியல் காரணங்களுக்காக பகடைகாயாக பயன்படுத்தி விட்டனர் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று இது குறித்து விளக்கமளித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனிப்பட்ட காரணங்களுக்காக விஸ்வரூபத்தைத் தடை செய்வது என்றால் கருணாநிதி குடும்பத்தின் படங்களையல்லவா முதலில் நான் தடை செய்திருப்பேன் என்று கூறினார். மேலும்,
''வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என்று கமல் பேசியதன் காரணமாகவே படத்தை தடை செய்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என்பது கமல் விருப்பம். மேலும் கமல் மட்டுமே இந்தியப் பிரதமரைத் தேர்ந்தெடுக்க முடியாது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment