அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
Tuesday, 12 February 2013
ஷார்ஜாவில் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இந்தியர்கள் விடுதலை: தாயகம் திரும்பினர்
ஷார்ஜாவில் பாகிஸ்தானியர் ஒருவரை கொலை செய்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 16 பஞ்சாபியர்கள் உள்பட 17 இந்தியர்களை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. சட்டவிரோத மது வியாபாரம் தொடர்பாக கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் ஷார்ஜாவில் உள்ள அல் சஜா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த மிஸ்ரி கான் என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேர் தாக்கப்பட்டனர். இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்த பஞ்சாபை சேர்ந்த 16 பேர் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 17 இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் ஷார்ஜாவில் உள்ள ஷரியத் நீதிமன்றம் அந்த 17 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் துவக்கம் முதலே தங்கள் மீதான குற்றச்சாட்டை அந்த 17 பேரும் மறுத்ததோடு தங்கள் மீது வேண்டும் என்றே கொலை குற்றத்தை சுமத்தியதாக தெரிவித்தனர். இந்நிலையில் இறந்த மிஸ்ரி கானின் குடும்பத்தாருக்கு 17 பேரின் சார்பில் ரூ. 5 கோடி வழங்கப்பட்டதையடுத்து அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. துபாயில் வசிக்கும் இந்திய ஹோட்டல் அதிபரான எஸ்பி சிங் ஓபராய் தான் இந்த ரூ.5 கோடியை வசூல் செய்து அவர்கள் விடுதலையாக உதவி செய்தார். நேற்று இரவு அந்த 17 பேரும் டெல்லி வந்திறங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment