Tuesday 12 March 2013

துபாயில் பிஸ்ஸாவில் பிளேடு

துபாயில் சிக்கன் பிஸ்ஸா கடையில் சிக்கன் பிஸ்ஸா ஆர்டர் செய்த நபரின் பிஸ்ஸாவில் எலும்புக்கு பதில் பிளேடு இருந்துள்ளதால் துபாய் காவல்துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. துபாயில் உள்ள கராமா பகுதியில் பெர்னாண்டஸ் என்பவர் தனக்கும் தன் நண்பருக்கும் சேர்த்து பிஸ்ஸா கடை ஒன்றிக்கு போன் செய்து பிஸ்ஸா ஆர்டர் செய்தார். பெர்னாண்டஸ் சாப்பிட்ட பிஸ்ஸாவில் எப்பிரச்னையுமில்லை. ஆனால் அவர் நண்பர் சாப்பிட்ட பிஸ்ஸாவில் வித்தியாசமான எலும்பு தென்படவே அதை உற்று பார்த்த போது பிளேடு என்பது தெரிய வந்துள்ளது. உடன் அதிர்ச்சியடைந்த பெர்னாண்டஸ் அப்பிஸ்ஸா கடைக்கு போன் செய்து புகார் செய்யவே அதற்கு பதிலாக வேறு ஒரு பிஸ்ஸாவை டெலிவரி செய்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த பெர்னாண்டஸ் குறைந்த பட்சம் மன்னிப்பு கோராமல் இலவச பிஸ்ஸாவை கொடுத்து விட்டு சென்றது தம்மை வருத்தத்திற்கு உள்ளாக்கியது என்றார். இச்சம்பவம் குறித்து பெர்னாண்டஸ் அளித்த புகாரின் பேரில் துபாய் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது சம்பந்தமான விசாரணைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய துபாய் நகராட்சியின் மூத்த சர்வே அதிகாரி பாபி கிருஷ்ணா இது போன்ற தவறுகள் நடந்தால் உடன 800900 என்ற எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்குமாறு அறிவுறுத்தினார்.

No comments:

Post a Comment