Monday 11 March 2013

இலங்கையில் இனி ஹலால் இல்லை

உணவு பொருட்களில் ஹலால் முத்திரை பொறிப்பது தொடர்பாக இலங்கையில் நிலவி வந்த சர்ச்சைக்கு தீர்வு காணும் விதமாக இனி ஹலால் முத்திரை பொறிக்க போவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. வழமையாக முஸ்லீம்கள் தாங்கள் உட்கொள்ளும் உணவு பன்றி இறைச்சி போன்ற தங்கள் மதத்தால் தடுக்கப்பட்ட பொருட்கள் இல்லாத பொருட்களா என கணடறிந்து வாங்க ஹலால் முத்திரை பொறிக்கப்படுகிறது. இலங்கையிலும் இவ்வழக்கம் நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் விடுதலைபுலிகளின் வீழ்ச்சிக்கு பின் முஸ்லீம்களுக்கு எதிராக பொது பல சேனா எனும் அமைப்பு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. வழமையாக பொறிக்கப்படும் ஹலால் முத்திரை பொறிக்கப்படக் கூடாது என்று அவ்வமைப்பு போர் கொடி தூக்கியது. இச்சூழலில் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றில் இலங்கை வர்த்தக சபை, மூத்த புத்த பிக்குகள் மற்றும் மூத்த முஸ்லீம் மத பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் தற்போதுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர ஹலால் முத்திரை குத்துவதில்லை என்றும் அதில் உள்ள அடிப்படை பொருட்களின் விபரங்களை பிரசுரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முஸ்லீம் மீடியா போரத்தின் தலைவர் அமீன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஹலால் முத்திரை இடப்பட்ட உணவு பொருட்கள் இருப்பதால் 6 மாதத்திற்கு அப்பொருட்கள் விற்பனையில் இருக்கும் என்றும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் பொருட்களில் வழமை போல் ஹலால் முத்திரை பொறிக்கப்படும் என்றும் அமீன் கூறினார்.

No comments:

Post a Comment