Tuesday 12 March 2013

கத்தாரில் மிகப் பெரும் இயற்கை எரிவாயு கிடங்கு கண்டுபிடிப்பு!

2.5 டிரில்லியன் கன மீட்டர்கள் அளவிலான இயற்கை எரிவாயு பகுதி கத்தாரில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1971க்கு பிறகு கத்தாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரும் அளவிலான எரிவாயு கிடங்கு இது என எரிசக்தி அமைச்சர் முஹமது பின் சலேஹ் அல் சதா கூறினார். ஓபெக் அமைப்பின் உறுப்பு நாடான கத்தார் தான் உலகின் அதிக இயற்கை எரிவாயு கனிமங்கள் உள்ள நாடு என்பதும் உலகிலேயே அதிக அளவில் திரவ வாயுவை உற்பத்தி செய்யும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. கத்தாரில் மொத்தம் 890 டிரில்லியன் கன மீட்டர் அளவு இயற்கை வாயு உள்ளது. இது உலகின் மொத்த எரிவாயுவில் 13 சதவிகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment